உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வியடையும் என்று கணித்திருந்த பிரண்டன் மெக்கல்லமை வங்கதேச ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் பலரும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி பெரும் என்று நினைத்திருந்தனர். ஆனால் வங்கதேச அணி வீரர்கள் தங்களின் விஸ்வரூப ஆட்டத்தின் மூலம் அனைவரது கணிப்பையும் பொய் ஆக்கிவிட்டனர்.
ரசிகர்கள் நினைத்தது போனேறே நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம் தென் ஆப்பிரிக்கா அணி தான் ஜெயிக்கும் என்று கணித்துள்ளார்.
ஆனால் நேற்று அது பொய்யாகிவிடவே, அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்று நினைத்தேன், ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் வங்கதேச அணி அற்புதமான ஆட்டத்தை கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனே இந்த டுவிட்டைக் கண்ட வங்கதேச அணி ரசிகர்கள் அவரை கிண்டல் செய்யும் விதமாக, பல புகைப்படங்களை மீம்ஸ் போன்று வெளியிட்டு வருகின்றனர்.
— Sakil Hasan شاكيل حشن (@SakilHasanTweet) June 2, 2019
Okey pic.twitter.com/xF3EpQ2VKh
— 🦋TaeTae’s🦋 (@NusratTamanna19) June 2, 2019
— Ananto Mohammad (@01Ananto) June 2, 2019

0 Comments