நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக தன் முழு தோற்றத்தையே மாற்றி வயதானவர் போல மாறியிருந்தார்.
சென்ற மாதம் அவர் பிரதமர் நரேந்திர மோடியை பேட்டி எடுத்திருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் அவர் மோடிக்குஆதரவாக பேசி வந்ததையும் பலரும் கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் மாதவன் ட்விட்டரில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். முதலில் அவர் ஆங்கிலத்தில் போட்டிருந்த ட்விட்டில் மக்கள் அனைவரும் காலி இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வளர்க்கவேண்டும், அது வளர்ந்தபிறகு 5000 வரை தமிழ்நாட்டில் விலை போகிறது என பதிவிட்டிருந்தார்.
அதன்பிறகு அதே விஷயத்தினை தமிழில் மற்றொரு ட்விட்டில் பதிவிட்டார் மாதவன். ஆனால் அதில் வேப்ப மரம் என்று கூட குறிப்பிடவில்லை. Google ட்ரான்ஸ்லேட்டர் பயன்படுத்தி அவர் அந்த ட்விட்டை அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டில் பல தவறுகளும் இருந்ததால் ரசிகர்கள் குழம்பிப்போய் மாதவனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன சார் சொல்ல வாரிங்க..என ஒருவர் ஓப்பனாகவே கேட்டுவிட்டார்.
To all farmers and agriculturalists .. with land to spare . #farmersinindia #agriculturists .. pic.twitter.com/IUjcYmzied
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 2, 2019

0 Comments