அஜித் நடித்து முடித்துள்ள 59வது திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் 'தல 60' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது. போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து ஜிப்ரானிடம் எச்.வினோத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.