கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும், இதற்கான புரமோ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் டிவி தனது முதல் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் அட்டகாசமான புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.