சூர்யா ரசிகர்களுக்கு இப்போது தவ காலம் போலதான். பல மாதங்களாக சூர்யாவின் படத்தை காண காத்திருக்கிறார்கள். NGK படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து கலக்கியது. தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. கம்யூனிசம் கொள்கைகள் இதில் இடம் பெற்றுள்ளதை காண முடிகின்றது.
அரசியலை விட்டு விலகும் இளைஞர்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டு மீட்டெடுக்க வேண்டும் என டிரைலர் சொல்கிறது. சூர்யாவின் வசனங்கள் சமகால அரசியலுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
டிரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே 1.4 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துவிட்டது. மேலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடிக்க யுவன் இசையமைப்பில் படம் அமைந்துள்ளது.