பாரிஸில் வரலாற்று சிறப்புமிக்க Notre Dame cathedral தேவாலயம் தீப்பிடித்து எரிந்த அதே நேரத்தில் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள Al-Aqsa மசூதியிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Al-Aqsa மசூதியில் உள்ள Marwani பிரார்த்தனை அறையின் கூரைப்பகுதி தீப்பிடித்து எரிந்ததையடுத்து இஸ்லாமிய Waqf’s தீ படைப்பிரிவினால் இந்த தீ விபத்து அணைக்கப்பட்டது.
பிரார்த்தனை அறையின் கூரைப்பகுதியில் இருந்து புகை வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த மசூதியானது, இஸ்லாமின் மூன்றாவது புனித தளமாக கருதப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இருப்பினும் Al-Aqsa மசூதியின் விவகாரத்துறையின் இயக்குநர் Sheikh Azzam al-Khatib கூறியதாவது, அந்த பகுதியில் விளையாடிய குழந்தைகளால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளதுஎன கூறியுள்ளார்.
حريق داخل المسجد الأقصى !— منصور أبو عبيدة (@Mansorryaan) April 15, 2019
النيران التهمت غرفة حراس المصلى المرواني بالمسجد . pic.twitter.com/oYEbPLXjiL

0 Comments