பிரான்சின் பாரம்பரியச் சின்னமான நாட்ரே டேம் பேராலயம் தீக்கிரையாகும் முன்னர் தந்தையும் மகளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குறித்த தந்தையும் மகளும் மாயமான நிலையில் அவர்கள் தொடர்பில் தகவல் கோரப்பட்டுள்ளது.
தற்போது பலரது கவனத்தை ஈர்க்கும் அந்த புகைப்படத்தில், பேராலயத்தின் வெளீயே அமைந்துள்ள திடலில் அந்த தந்தையும் மகளும் விளையாடியபடியே சிறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
குறித்த புகைப்படத்தை பதிவு செய்த 23 வயதான சுற்றுலாப் பயணி Brooke Windsor தெரிவிக்கையில், அந்த புகைப்படத்தை நானே பதிவு செய்தேன். பேராலயம் தீ பற்றி எரியும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் படம் பிடித்தேன் என்றார்.
தற்போது அவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரியவந்த நிலையில், Brooke Windsor தமது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.
மேலும், இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுகவும், அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுவரை அந்த புகைப்படமானது சுமார் 80 ஆயிரம் பேரால் உலகெங்கிலும் பகிரப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பேராலயத்தில், புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி திங்களன்று மாலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பேராலயத்தின் மேற்கூரைப் பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதும் பற்றியது. இதில் தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று பல செல்வந்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.

0 Comments