நெல்லையில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டியடித்த வயதான தம்பதியினருக்கு, இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அசத்தலாக ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால்,இவர்கள் இருவர் மட்டும் அங்கு உள்ளனர். இவர்கள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினர். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி செந்தாமரை, சிறிதும் தாமதிக்காமல் கையில் கிடைத்த செருப்பு, சேர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கினார். பின்னர் சண்முகவேலும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து விரட்டினார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதும் வயதான தம்பதியினரின் வீரத்தை பார்த்து அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லை தம்பதியனரை, தமிழ் பட கதாநாயகர்கள் அஜித் மற்றும் விஜய் படங்களை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 13, 2019
பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை
Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers pic.twitter.com/3rLoRFZxfc

0 Comments