நீண்ட பல தொடர்களாக கிண்ணத்தை கைப்பற்ற தவறிய டோட்டனம் அணி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லிவர்பூல் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் களமிறங்கியது.
ஆனால் இறுதிப்போட்டியில் லிவர்பூல் அதிரடி காட்டியது. இரண்டு கோல் கணக்கில் டோட்டனம் அணியை பந்தாடிய லிவர்பூல் கிண்ணத்தை கைப்பற்றினர்.
இந்த தோல்வியில் இருந்து மீளாத லிவர்பூல் அணியை இணையவாசிகள் தற்போது வறுத்தெடுக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோஹ்லி தான் டோட்டனம் அணியின் தோல்விக்கு காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
டோட்டனம் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் சமீபத்தில் விராட் கோஹ்லியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதற்கு பதிலாகவே டோட்டனம் ரசிகர்கள் வசைபாடியுள்ளனர். கோஹ்லியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால், டோட்டனம் அணி தோல்வியை சந்தித்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், விம்பில்டன் போட்டியில் ரோஜர் பெடரர் தோல்வியை தழுவியதும், கால்பந்து உலகக் கிண்ணம் தொடரில் ஜேர்மனி முதல் சுற்றில் வெளியேறியதும் இதனாலையே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
After a few tweets in the last couple of years good to finally meet @imVkohli. A great guy and a brilliant sportsman. 🏏 pic.twitter.com/vGEOs0gGlT
— Harry Kane (@HKane) May 24, 2019

0 Comments