இந்திய கிரிக்கெட் அணித்தலைவரும், நம்பிக்கை நட்சத்திரமுமான விராட் கோஹ்லிக்கு பயிற்சியின் போது விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகிருந்தது.
அணித்தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வலது பெருவிரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐஸ் நிரப்பப்பட்ட டம்ளரில் கை விரலை நனைத்துக்கொண்டே கோஹ்லி வெளியேறினார்.
எதிர்வரும் 5ம் திகதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி விளையாடுவாரா என கேள்வி எழுந்தது
இந்நிலையில், கோஹ்லி தற்போது நலமாக உள்ளார். அவர் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என அணி நிர்வாகத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.