இந்த படம் சீனர்களுக்கும் பிடிக்கும்: 'நேர் கொண்ட பார்வை' தயாரிப்பாளர்


அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பதும் இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஸ்ரீதேவி நடித்த கடைசி திரைப்படமான 'மாம்' திரைப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் போனிகபூர் கூறியபோது, 'சீனாவில் இன்று 'மாம்' ரிலீஸ் ஆகிறது. இது எனக்கு ஒரு எமோஷனலான விஷயம். சீனர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.



போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பதும், அஜித்தின் அடுத்த படத்தையும் இவரே தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments