0 ஐபிஎல் தொடர்களில் 8 முறை ஃபைனல், சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாளை ஹைதராபாத் மைதானத்தில், 4 -வது முறையாக மோதவுள்ளன தோனியின் சென்னை மற்றும் ரோகித்தின் மும்பை அணிகள். இந்த சீஸனில், சென்னை அணியின் வெற்றிக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடிவருவது யாரை எனக் கேட்டால், அது கேப்டன் தோனியின் மகள் ஸிவா தான். ஒவ்வொரு போட்டியின்போதும் சென்னை அணி வீரர்கள் தங்கள் குடும்பங்களுடன்தான் செல்கின்றனர். இதனால், போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு முறையும் மைதானத்தில் குழந்தைகளை அதிகமாகக் காண முடிந்தது. 

இதில், தோனியின் மகள் எப்போதும் ஸ்பெஷல்தான். அவரின் சேட்டைகள், குறும்புத்தனங்கள் அவ்வப்போது வைரலாகிவருகிறது. இவரது கியூட்டான சேட்டைகளால் சோஷியல் மீடியாவின் சூப்பர் ஸ்டாராக வலம்வருகிறார். அப்படித்தான் இந்த முறையும். டெல்லி அணி வீரர் ரிஷப் பன்டுக்கு ஸிவா  இந்தி கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. 

அதில், பன்டுக்கு  இந்தி எழுத்துகளைக் கற்றுத்தருகிறார். அப்போது, சில எழுத்துகளை விட்டுவிட்டுதாகக் கூறி, மீண்டும் அந்த எழுத்துகளைச் சொல்லித்தருகிறார். இதற்கு நன்றி சொல்லும் பன்ட், பின்னர் இதுகுறித்து இருவரும் பேசுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. முன்னதாக, நேற்று இரவு மைதானத்தில் ரெய்னா மகளுடன் ஸிவா விளையாடிய காட்சிகள் அதிகம் பகிரப்பட்டது.  

View this post on Instagram

Back to Basics !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on