பொதுவாக சிலர் இரவு நேரங்களில் சாப்பிடமாலே துங்கி விடுவார்கள்.
இரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும். தற்போது அவற்றை இங்கு பார்ப்போம்.
- மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக் கூடிய மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 உடலுக்கு மிக முக்கியம். இவை இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஏற்படும்.
- இரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும்.
- எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.
- வெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொழுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.

0 Comments