சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான ரெய்னா சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார்.
நடக்கும் 12 ஆவது ஐபில் தொடரில் சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் சென்னை அணி 4 போட்டிகளில் தோற்றுள்ளது. இதில் 2 போட்டிகளில் தோனி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சென்னை அணி ரசிகர்கள் தோனி இல்லாமல் சென்னை அணி ஒன்றுமே இல்லை எனக் கருதத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை அணியின் துணைக்கேப்டன் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பியபோது ‘ தோனியை ஒரு கேப்டனாக நாங்கள் இழைப்பதை விட ஒரு வீரராக மிகவும் இழக்கிறோம். ஏனென்றால் தோனி களத்தில் இருக்கும் போது எதிரணியினருக்கு அது நெருக்கடிதான். அவர் அணியில் இல்லாதபோது அதை நாங்கள் உணர்கிறோம். நான் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அடுத்த ஆண்டில் இருந்து என்னை நீங்கள் அவ்வாறுக்(தோனியைப் போன்ற கேப்டனாக) காணலாம். அதுவும் அவர் முடித்துக்கொள்ளும் பட்சத்தில் அவர் திறமை எனக்குத் தேவை. சென்னைக்காக அவர் விரும்பும்வரை விளையாடுவார்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ரெய்னாவின் இந்தப்பேச்சால் தோனி விரைவில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது. அவருக்குப் பின் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா தொடர்வார் எனத் தெரிகிறது.

0 Comments