பெண்ணின் கர்ப்பப்பையில் 6 இன்ச் அளவிற்கு பைக்கின் உதிரிப்பாகம் ஒன்று இருந்ததை அடுத்து அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அடிக்கடி கணவன், மனைவி இருவரும் கருத்துவேறுபாடால் சண்டை போட்டு வந்துள்ளனர். அந்த பெண்ணை அவருடைய கணவர் பல நேரங்களில் அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இதன்படி ஒருநாள் நடந்த சண்டையில் அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய கணவர், ஆத்திரத்தின் உச்சத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகியுள்ளார். இதனால் வலியால் துடித்தாலும், அந்த பெண் நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலியால் துடித்த அந்த பெண், மருத்துவமனையில் சோதனை செய்தபோது அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பைக் கைப்பிடியின் உடைந்த 6 இன்ச் பகுதி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதன்பின்னர் தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் காவல்துறையினர்களிடம் கூறி புகார் செய்ய, போலீசார் அவருடைய கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய கர்ப்பப்பையில் இருந்த பைக்கின் உதிரிபாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments