தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே 'தெறி', 'மெர்சல்' என இரண்டு மாஸ் டைட்டில்களை விஜய் படத்திற்காக தேர்வு செய்த இயக்குனர் அட்லி, இம்முறை 'வெறி' அல்லது 'வெறித்தனம்' ஆகிய இரண்டு டைட்டில்களை ஒன்றை தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் 'மைக்கேல்' என்ற கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் கேரக்டரில் விஜய் நடிப்பதால் 'மைக்கேல்' அல்லது 'கேப்டன் மைக்கேல்' என்ற டைட்டில்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இருப்பினும் ஜூன் 22ஆம் தேதி அதிகாரபூர்வமாக ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் வரை பொறுமை காப்போம்
விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளது.

0 Comments