இந்தியாவில் நோக்கியா 4.2 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அடுத்த வாரம் மே 7 திகதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், ஸ்மார்ட்போனிற்கான டீசர் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
எனினும், இதன் விலை மற்ற மாடல்களுக்கு சவால் விடும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.
All your answers are a tap away. 4 days before you can #DoItAll— Nokia Mobile India (@NokiamobileIN) May 3, 2019
Stay tuned! pic.twitter.com/r4Jwsxj744
நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்
- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0, 1.12µm பிக்சல்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

0 Comments