சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படவில்லை.
மேலும் இன்று வெளியாகியுள்ள சிங்கிள் பாடல் வீடியோவிலும், கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் விளம்பரங்களிலும் ரிலீஸ் தேதி காணப்படவில்லை.
எனவே Mr.லோக்கல் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் எழுப்பி வருகின்றனர். ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என்பதே சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் அன்றைய தினம் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

0 Comments