ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால், டோனி எப்போது வருவார் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.


இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய அணியாக சென்னை அணி உருவாகி வருகிறது. டோனி தலைமையிலான சென்னை அணி பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான தொடரில் டோனி விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக ரெய்னா சென்னை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் சென்னை அணி, ஹைதராபாத் அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்தது.
டோனி இல்லாதது தான் இதற்கு காரணம், அவர் இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்பு ரெய்னா கூறுகையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் குறைந்த அளவிலான ஓட்டங்கள் எடுத்துவிட்டோம், டோனி முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாகவே அவர் விளையாடவில்லை, தற்போது அவர் நன்றாக உள்ளார்.
இதனால் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடலாம் என்று நம்பப்படுவதாக ரெய்னா கூறியுள்ளார்.