அஜித்திற்கு இவ்வருடம் சிறப்பான வருடமாக அமைந்துவிட்டது. 2019ன் தொடக்கமே அவரின் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது.
100 நாட்கள் கடந்து ஓடிய படம் குடும்பத்துடன் ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவைத்தது. அடுத்ததாக அனைவரும் அவரின் நேர்கொண்ட பார்வை படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
தற்போது டிவிட்டரில் அவரின் பிறந்த நாளுக்கென #HBDIconicThalaAJITH என டாப் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.