தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு, தற்போது ரஜினியின் 'தர்பார்', 'விஜய்யின் 'தளபதி 63' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகர், ஹீரோவை அடுத்து அவர் கதாசிரியர் அவதாரமும் எடுக்கவுள்ளார். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன் முதல் தற்போது 'மிஸ்டர் லோக்கல்' வரை பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷின் உதவியாளர் ராஜசேகர் என்பவர் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தின் காமெடி பகுதிக்கு யோகிபாபுவே ஸ்க்ரிப்ட் எழுதவுள்ளாராம். ஏற்கனவே யோகிபாபு, 'லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
காமெடி ஸ்க்ரிப்டை அடுத்து ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கும் ஐடியாவும் யோகிபாபுவுக்கு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு வருடங்களில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது