உலகிலேயே நம்பர் ஒன் பந்துவீச்சாளராக பும்ரா திகழ்கிறார் என்று இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்ற ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கா, இந்தாண்டு மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளரான பும்ரா மும்பை அணியில் மட்டும் அல்லாமல், உலகிலேயே நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்வதாக பாராட்டி உள்ளார்.
தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜஸ்பிரீத் பும்ரா, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments