அமெரிக்காவை சேர்ந்த 25 வயது மாணவி, 75 வயதான தன்னுடைய பேராசிரியரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கவை சேர்ந்த 25 அவயதான கேமரூன் பிளாட் என்கிற மாணவி சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் தன்னுடைய முதுகலை பட்டத்தினை முடித்துள்ளார்.
இவர் கடந்த வாரம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அனைவருக்கும் அதிர்ச்சியளிக்க கூடிய விதத்தில், தன்னுடைய முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான லீ மிட்செல் (72) என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் பதிவில், அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்த போது தான் ஆங்கிலத் துறையின் தலைவர் லீயை சந்தித்தேன்.
5 வருடங்களுக்கு முன்பு அவருடைய வகுப்பு ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அவர் எனக்கு அந்நியர் போல இருந்தாலும், அவருடைய திறமை, உணர்திறன், மற்றும் பேரார்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர் எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. நான் என்னுடைய முதுகலை படிப்பிற்காக இங்கிலாந்து சென்றதிலிருந்தே எனக்கு அவருடைய ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.
ஆக்ஸ்போர்டில் இரண்டு வருட பட்டப்படிப்பு முடிந்த பின்னர், என் அருமையான நண்பர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர்.
பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் 6 மாதம் டேட்டிங் சென்றோம். அப்போது இருவருக்குள்ளும் காதல் இருந்தது தெரியவந்தது.
7 மாதமாக இருந்த ரகசியத்தை, வெளிப்படையாக கடந்த வாரம் தான் கூறினேன். அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் நாங்கள் நன்கு யோசித்து முடிவெடுத்துள்ளோம்.
ஒருவருக்கொருவர் முழுமையாக புரிந்துகொண்டோம் என பதிவிட்டுள்ளார்.