பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கவுண்டி பகுதியை சார்ந்தவர் தாமஸ் கிரேக் (வயது 71). பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பகுதியை சார்ந்த பெண்மணி லோரி டேன்ஸ் (வயது 23). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2014 ம் வருடத்தின் முதல் முகநூல் மூலம் நட்பானது ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பை வளர்க்கும் பொருட்டு இருவரும் பேசி வந்த நிலையில்., சில மாதங்கள் கழித்து தனது இணைய தோழியை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று காணுவதற்கு திட்டமிட்டு., பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தாமஸ் சென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருவரும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்த பின்னர் தாமஸ் தனது காதலை இணைய தோழியிடம் தெரிவிக்கவே., அவரும் தாமஸின் காதலை ஏற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்கள் இருவருக்கும் மேரி என்ற இரண்டு வயதுடைய குழந்தை உள்ளது. ஒரு வருடத்தில் சுமார் 5 மாதங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று தங்கி இருந்துவிட்டு பின்னர் பிரிட்டிஷ் நாட்டிற்கு திரும்பும் வழக்கத்தை வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் பிற நாட்களில் ஸ்கைப் மூலமாக பேசி தங்களின் இல்லற வாழ்க்கையின் காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு பலர் இணையத்தின் மூலமாக தாமஸை கவர்ந்திழுத்து விட்டாய் என்று கூறி கேலியும்., ஏளனமும் செய்து வருகின்றனர்.
இது குறித்து லோரி டேன்ஸ் தெரிவித்தாவது., எங்களது வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களை சந்தித்துள்ளோம்., முகநூலில் அவரை பார்த்தவுடன் எனக்கு காதல் வரவில்லை., அவர் வயதானவராக இருப்பினும் அவரின் வயது குறித்த எண்ணம் எனக்கு தோன்றவில்லை., இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்த போது துவக்கத்தில் எதிர்த்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டனர். அவரின் நீல நிற கண்கள் என்னை கவர்ந்தது., எங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கிறது என்று தெரிவித்தார்.