துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி ஒருவருக்கு லாட்டரி டிக்கெட் மூலம் 4 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது.
துபாய் டியூட்டி ஃபிரீ என்னும் நிறுவனம் மில்லினியம் மில்லினியர் லாட்டரி டிக்கெட் கடையை நடத்தி வருகிறது. இங்கு எலிஸா என்ற மாணவியின் பெயரில் வாங்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
எலிஸாவின் தந்தை கலீஜில் கடந்த 19 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். இவரது அதிர்ஷ்ட எண் 9 என்பதால், கூட்டுத்தொகை 9 வரும் No.0333 என்னும் எண்ணை ஆன்லைனில் தன் மகளின் பெயரில் வாங்கியுள்ளார்.
அந்த பெயரிலேயே பல ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். தற்போது அவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அந்த எண்ணுக்கு 7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு கிடைத்தது குறித்து கலீஜில் கூறியதாவது, இதுவரை 43 தொடர்களிலும் பங்கேற்றுள்ளேன். ஒரு தொடரைக் கூட விட்டதில்லை. அதேபோல் மல்டி மில்லினியம் மில்லினியர் போட்டியிலும் கலந்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.