மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த Microsoft Lumia950 ஸ்மார்ட் கைப்பேசியானது 320 பவுண்ட்ஸ் பெறுமதியிலேயே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது 289 பவுண்ட்ஸ்கள் எனும் சில்லறை விலையில் தற்போது விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விலைக்கழிவானது ஐக்கிய இராச்சிய கைப்பேசி பிரியர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர Qualcomm Snapdragon 808 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தினைக் கொண்டு இக் கைப்பேசி செயற்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

User Rating