பாதுகாப்பிற்கு பெயர் போன பிளாக்பெர்ரி நிறுவனம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிளாக்பெர்ரி நிறுவனத்தில் இருந்து நியோன், மெர்குரி, ஆர்கான் ஆகிய 3 புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விலை மலிவானதும் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானதுமான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆல்காடெல் ஐடோல் 4 மொடலில் உருவாகும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 'டிடெக்50' என பெயரிடப்பட்டுள்ளது. 3 GB ரேம் மற்றும் 13 மெகா பிக்சல் (பின்புறம்), 8 மெகா பிக்சல் முன்புற கெமராவுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனை 299.99 டொலருக்கு தற்போது முன்கூட்டியே பதிவு செய்யலாம் என பிளாக்பெர்ரி அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு 8- ஆம் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது மற்ற ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளை களையும் வண்ணம் பிளாக்பெர்ரி ஏற்கனவே வெளியிட்டு இருந்த டிடெக் மென்பொருளின் பெயரையே தற்போது வெளிவர உள்ள போனுக்கு சூட்டியிருப்பது நினைவு கூரத்தக்கது.