உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடை பெறுகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்து கொள்வதும் மிகவும் அவசியம்.
இங்கு ஸ்மார்ட்போனினை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாத்திட சில எளிய வழிமிறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
ஸ்மார்ட்போனை லாக் செய்யாமல் விட்டால்
ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இது உங்களுக்கு எரிச்சலாக தான் இருக்கும்.
ஆனால் பின் கோடு கொண்டோ அல்லது மற்ற வழிகளிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் லாக் செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்கள் தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி காக்க முடியும். தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன்களில் உங்கள் கைரேகையை கொண்டு லாக் செய்யும் அம்சமும் வழங்கப்படுகின்றது.
நம்பக தகுந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கும் தரவுகளுக்கான பயன்பாடுகளை பற்றிய தெளிவான அறிவு உங்களுக்கு தேவை படுகின்றது. நீங்கள் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு நம்பகமான பயன்பாடு மேம்பாட்டாளரிடம் இருந்து பெறுதல் அவசியம். அதை செய்யும் முன் அதை பற்றிய ஆய்வையும் கூறுகளையும் பற்றி நன்கு படித்து பின் செய்யதல் நல்லது.
தவராமல் ஸ்மார்ட் போனை மேம்படுத்துங்கள் (Update)
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், அதன் பயன்பாட்டை முன்னோக்கி எடுத்த செல்பவர்களும் ஸ்மார்ட் போன் பிரச்சினைகளை சரிசெய்யவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு விரிசல்களை சரிசெய்யவும் என்று பல விதங்களில் முயற்சி செய்து மென்பொருள் மேம்படுத்துதல் கூறுகளை ( அப்டேட் ) வழங்குகின்றனர். உங்கள் போனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
பயன்பாடுகளை மறக்காமல் அணைத்து வைக்கவும்
பொது வை-பை நெட்வர்க்குகளை பயன்படுத்துவது மலிவுதான் ஆனால் அவைகள் பெரிய அளவில் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் வை-பை நெட்வர்கை யாரேனும் கண்காணிக்க கூடும். நீங்கள் பரிமாறிகொள்ளும் தகவல்களை அவர்களால் கண்கானிக்க முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை அவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அபாயமும் உள்ளது.
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரை செயல்படுத்தவும்
இதை செயல் படுத்துவதால் உங்கள் போன் தொலைந்து போனாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப் செயலியுடன் உங்கள் போனை பொருத்தி போனை விரைவாக கண்டுபிடிக்க முடியும். இதனால் தொலைவில் இருந்து உங்கள் போனை ஐந்து நிமிடத்திற்கு ரிங் அடிக்க வைக்க முடியும். Settings >> Security >> Device Administrators சென்று இதை செயல்படுத்த பட்டுள்ளதை சரி பார்க்கவும்.
கருவியை ரூட் செய்ய வேண்டாம்
ஆண்ட்ராய்ட் கருவியானது அதன் பயன்பாட்டாளர்களுக்கு போனின் முழு பரிமானத்தையும் பயன்படுத்தும் சலுகையை கொடுப்பதுடன் கஸ்டம் ROMSஐ நிறுவும் சுதந்திரத்தையும் அளிக்கின்றது. ஆனால் ரூட் பயன்பாட்டுடன் கூடிய செயலிகளால் போனுக்கு மிகுந்த பாதிப்பு வருவதால் அதை நிறுவுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
0 Comments