பேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் ஸக்கர்பர்க், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானத்தின் சோதனை அரிஸோனாவில் நடத்தப்பட்டதாகவும், சில ஆயிரம் அடிகள் உயரத்தில் சுமார் 96 நிமிடங்கள் விமானம் வெற்றிகரமாக பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையத்தள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.