மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக விண்டோஸ் 10 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இவ் இயங்குளத்தினை எதிர்வரும் ஜுலை 29ம் திகதி வரைக்கும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயங்குளத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான இயங்குதளமானது இதுவரை உலகெங்கும் சுமார் 350 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை பயன்படுத்திய பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பில் திருப்தியடைந்துள்ளதாக அந் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.