இணையத்தில் பிரபலமான தேடல் தளமாக திகழும் கூகுள், ஒவ்வொரு சிறப்பு தினத்தை முன்னிட்டு குறித்த தினத்தை உணர்த்தும் வகையில் ஒரு சிறப்பு டூடுலை வடிவமைத்து வெளியிடுவது வழக்கம்.
தந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையார் தினமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று தந்தையர் தினம் கொண்டப்படுவதை முன்னிட்டு தந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அருமையான டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் வழிகாட்டி என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை அணியும் ஒரு ஜோடி ஷூவுடன், அதன் கூடவே வரும் குழந்தையின் ஒரு ஜோடி ஷூவை கொண்டதாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டும் வாசல் மிதியடியில் இருப்பதைப்போல ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையின் வாழ்க்கைப்பாதையை வழிநடத்தும் தந்தையின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.
தந்தையர் தினமானது நாட்டிற்கு நாடு வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினமே தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தையொட்டி பிள்ளைகள் தங்களது அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி
0 Comments